லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு


லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் (கிருஷ்ணன் கோவில்) குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 60 வருடங்கள் கடந்த நிலையில் அறநிலையத்துறையினர் கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர். இதன்படி கோவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி-விஸ்வரூபம், காலசந்தி பூஜை, நித்யஹோமம், மூலமந்திரஹோமங்கள் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. 9.45 மணிக்கு மூலஸ்தான தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story