அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி


அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி
x

அஞ்சல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.

சேலம்

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய அஞ்சல் துறை சார்பில் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. உலகில் உள்ள அனைத்து சாலைகளையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே சூப்பர் ஹீரோவின் நோக்கம் மற்றும் இந்த இலக்கை அடைய என்னென்ன சக்திகள் தேவை என்பதை விளக்கி ஒருவருக்கு கடிதம் எழுதுவதே இந்த போட்டியாகும். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுதலாம். கடிதத்தை வருகிற 15-ந் தேதிக்குள் முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு சர்க்கிள், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்துடன் பங்கேற்பாளரின் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். மாநில அளவிலும், இந்திய அளவிலும் சிறப்பான கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story