விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
x

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இந்திரா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, ஒன்றிய செயலாளர்கள் பூலான்பாண்டியன், சிவகுரு, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் திருமாவளவன் 60-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் ரூ.60 லட்சம் கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கப்படும். திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில்

டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை தமிழக அரசின் செலவில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கருத்தில் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணிகண்டராசா உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து நன்றி கூறினார்.


Next Story