விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை பிரசாரம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்   தெருமுனை பிரசாரம்
x

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெருமுனை பிரசாரம் நடத்தினர்.

தூத்துக்குடி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சாசன சட்டம் வழங்கும் மத சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வலியுறுத்தியும், நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கண்டித்தும், அவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் தூத்துக்குடி ஜெயிலானி தெருவில் தெருமுனை விளக்க பிரசார கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவர் மீராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பால் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் அசன், மனித நேய மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் சம்சுதீன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், தமிழ் புலிகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு, ஏகத்துவ ஜமாத் மாவட்ட தலைவர் அப்பாஸ், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தணராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் காஜா, வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், வக்கீல் அணி அர்ஜூன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

---

Image1 File Name : 11229231.jpg

----

Reporter : C.Sankaranarayanan_Staff Reporter Location : Tirunelveli - Tuticorin


Next Story