விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; 9 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்வதை கைவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன் தலைமையில் நேற்று திருசசெந்தூர் பஸ் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் உட்பட 9 பேரை திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story