திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்செந்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலகத்தை மாற்றும் முடிவை கைவிட்டு தொடர்ந்து, இங்கேயே செயல்பட அரசாணை வெளியிடக் கோரியும், திருச்செந்தூர் தாலுகா ஆஸ்பத்திரியை, மாவட்ட ஆஸ்பத்திரிக்கு இணையாக தரம் உயர்த்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலாளர் தமிழ்க்குட்டி, காங்கிரஸ் கட்சி விவசாய அணி மாவட்ட பொருளாளர் கார்க்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க மாநில பொது செயலாளர் முகைதீன், தமிழக மாணவர் இயக்க மாநில பொது செயலாளர் அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.


Next Story