விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.
வடலூர்:
கடலூர் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. இதற்கு பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பொதினிவளவன் நோக்க உரை ஆற்றினார். கடலூர் மாநகராட்சி துணை மேயரும், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளருமான வக்கீல் பா.தாமரைச்செல்வன் தொடக்க உரையாற்றினார். கடலூர் மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன்(கிழக்கு), துரை.மருதமுத்து(மேற்கு), பால.அறவாழி(தெற்கு), சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கெய்க்வாட் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் இல.திருமேனி, .வீர.திராவிடமணி, செல்வ.செல்வமணி, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி ஜெயக்குமார், காட்டுமன்னார்கோவில் மணவாளன், விருத்தாசலம் அய்யாயிரம், கடலூர் அறிவுடைநம்பி, சிதம்பரம் யாழ்திலிபன், நெய்வேலி அ.உ.அதியமான், நிர்வாகிகள் செந்தில், ச.ம.குரு, பழனிவேல் ஜவகர் சுபாஷ், நீதி வள்ளல் கலைஞர் கவுதமன் முருகையன், ஆற்றலரசு, எம்.ஜி.ஆர்., காட்டு ராஜா ராஜ்குமார், அருண் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தி்ல், வருகிற 14-ந் தேதி கடலூரில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் எழுச்சி பேரணி நடத்துவது, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவதற்க்கு ரூ.25 லட்சம் தருவதை வரவேற்பது, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைப்பதை கண்டிப்பது, சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியை முழுமையாக சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போடப்பட்ட 110 வழக்குகளை உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.