விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x

கல்லக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி, செப்.4-

புள்ளம்பாடி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் கல்லக்குடியில் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாகிகள் நீலகண்டன். நீதிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணைச்செயலாளர் விடுதலைஇன்பன் கலந்துரையாடினார். கூட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 45 கிராமங்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், மயானம், சமுதாயகூடங்கள், பஸ்நிலையங்கள், தொகுப்புவீடுகள் சீரமைப்பு, சாலை மற்றும் வடிகால் வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் பேரூர் பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


Next Story