திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகம் மறு சீரமைப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மோ.எல்லாளன் கலந்து கொண்டு புதிய மாவட்ட நிர்வாகம் மறு சீரமைப்பு குறித்து பேசினார். பின்னர்

புதிதாக கட்சி பொறுப்புக்கு வர விரும்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, மாவட்ட துணை செயலாளர் இந்திரா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட துணை செயலாளர் செல்வி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், கருத்தில் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, முற்போக்கு மாணவர் கழகம் மாநில துணை செயலாளர் தர்மராஜ், மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், தொண்டரணி மாநில துணை செயலாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் நகர செயலாளர் உதயா நன்றி கூறினார்.


Next Story