தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்


தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம்
x

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட புதிய நிர்வாக சீரமைப்பு ஆய்வுக் கூட்டம் எட்டயாபுரம் ரோட்டிலுள்ள தனியார் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேலிடப் பொறுப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் எல்லாலன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஆட்டோ கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தைகுமார், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மகாராஜன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story