விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது நடவக்கை எடுக்கக்கோரி கோஷங்கள் எழுப்பபட்டன. .இதில் மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் பாசறைபாலு, இளைஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், நகர செயலாளர் இடிமுரசு, பாவரசு, நிர்வாகிகள் வேல்முருகன், இனியன், விடுதலைமணி, மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை கள்ளக்குறிச்சி போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story