விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 33 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்  33 பேர் கைது
x

நாகர்ேகாவிலில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்ேகாவிலில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

ெதாடர் போராட்டம்

குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் 21-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் ேநற்று காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அம்பேத்கர் சிலை முன் திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அந்த வகையில் 10 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story