திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி எதிரே உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையர் வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story