குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் நூலகம் கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்


குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் நூலகம்  கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குதிரைச்சந்தல் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட நூலகத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குதிரைச்சந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.செல்வராஜ் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, நூலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து அவர், மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு ஏற்ப பயன் தரக்கூடிய புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும். அதேபோல் 2 தமிழ் நாளிதழ்கள் 2 ஆங்கில நாளிதழ்கள் வாங்கி பராமரிப்பதோடு மாணவர்களுக்கு வாசிப்பு திறனை ஊக்குவிக்க தினமும் வாசிக்க வைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் 700 மரக்கன்றுகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் மாணவர்கள் நட்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அனு செல்லப்பிள்ளை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்திவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் சகுந்தலா பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சமுத்து, கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் தமிழ்ச்செல்வன், வனவர் அருள், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் அனந்த கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.


Next Story