தெற்கு கள்ளிகுளத்தில் புதிய நூலக கட்டிட பணி


தெற்கு கள்ளிகுளத்தில் புதிய நூலக கட்டிட பணி
x

தெற்கு கள்ளிகுளத்தில் புதிய நூலக கட்டிட பணியை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.17.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய நூலகம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிட கட்டுமான பணியை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி.ஜோசப் பெல்சி, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர் நம்பி, மாநில மீனவரணி அமைப்பாளர் எரிக்ஜீட், மாவட்ட பிரதிநிதிகள் முரளி, கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரின்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

* ராதாபுரம் கிளை நூலகத்தில் புத்தகங்கள் வைக்கவும், வாசகர்கள் அமர்ந்து படிக்கவும் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தனிடம் கூடுதல் கட்டிடம் கட்டித்தர நூலகர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அவர், ஞானதிரவியம் எம்.பி.யிடம் எடுத்து கூறினார். இதைத்தொடர்ந்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், துணை தலைவர் சபாபதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story