நூலக வார விழா நிறைவு:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


நூலக வார விழா நிறைவு:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

நூலக வார விழா நிறைவு:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

நீலகிரி

குன்னூர்

55-வது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தமல்லிகா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் உறுப்பினர் புரவலர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் பங்கஜ் கோயல் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். வாசர் வட்ட தலைவர் ரங்கநாதன் மாணவர்களின் நூலக பயன்பாடு குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியை நூலகர் ஜெயஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்த பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story