எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா


எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா
x

விருத்தாசலத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

கடலூர்

விருத்தாசலம்:

இந்திய ஆயுள் காப்பீடு லியாபி முகவர் சங்கம் சார்பில் விருத்தாசலம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், முகவர்களின் பணிக்கொடையை ரூ.20 லட்சம் ஆக உயர்த்த வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக்குழு காப்பீடு வழங்க வேண்டும், நேரடி முகவர்களுக்காக கூடுதல் பண பயன்களை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், கவுரவ தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கருணாநிதி, சண்முகம், கோவிந்தராஜ், ஜெயபால், ஜெகதீசன், சசிகுமார், எத்திராஜ், வேல்முருகன், தியாகராஜன், சண்முகம், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.


Next Story