தொழிலாளியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
ராதாபுரம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ராதாபுரம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளி கொலை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). தொழிலாளியான இவர் வள்ளியூரைச் சேர்ந்த சுடலையாண்டி (54) என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதை மனதில் வைத்துக்கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி சுடலையாண்டி, வள்ளியூரைச் சேர்ந்த முருகேசன் (55) ஆகியோர் குமாரை ஆட்டோவில் அழைத்து சென்றனர். ராதாபுரம் அருகே உள்ள மருதப்பபுரத்தில் இருந்து கால்கரை ரோட்டில் ஒரு தோட்டம் அருகே குமாரை 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்தனர். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குமரகுரு நேற்று விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட சுடலையாண்டி, முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.