இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை


இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

முன்விரோதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குப்பையன்காட்டை சேர்ந்த பக்கிரி மகள் வேதநாயகி(வயது 27). இவர், தனியார் நிறுவனத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அஞ்சப்பன் மகன் வீரையன்(22) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீரையனை, வேதநாயகி துடைப்பத்தால் அடித்துள்ளார்.

இளம்பெண்வெட்டிக்கொலை

தன்னை துடைப்பத்தால் அடித்ததால் வேதநாயகி மீது வீரையன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வீரையன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பழனிவேல்(24), ராஜேஷ்(23), ராஜேஷ்குமார்(22) ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேதநாயகியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொன்றனர்.

பின்னர் அவரது உடலை அருகில் உள்ள செப்டிக் டேங்கில் வீசிவிட்டு சென்று விட்டனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரையன், பழனிவேல், ராஜேஷ், ராஜேஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பழனிவேல் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் நேற்று தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில் வீரையன், ராஜேஷ், ராஜேஷ்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


Next Story