தொழிலாளியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

சிவகாசி அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்.

சிவகாசி அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வெட்டிக்கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). சுமை தூக்கும் தொழிலாளி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (35), கார்த்திக்ராஜா (35), மணிகண்டன் (36) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் முத்துகிருஷ்ணன், கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜ்குமாரை வெட்டிக்கொலை செய்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கஜிரா ஆர் ஜிஜி விசாரித்து முத்துகிருஷ்ணன், கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story