மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் கொலை
விருதுநகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 38). இவருடைய மனைவி பிரேமசுந்தரி (31). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றி வந்தார்.
உதயகுமார், அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 1.06.2016 அன்று கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரேமசுந்தரி மீது மண் எண்ெணய் ஊற்றி உதயகுமார் தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்ைக நீதிபதி பகவதியம்மாள் விசாரித்து மனைவியை தீ வைத்து கொலை செய்த உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.