தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை


தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
x

தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து குழித்துறை கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பணம் கேட்டு தகராறு

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள மஞ்சாலுமூடு திருமன்தோட்டத்தைச் சேர்ந்தவர் குமரே சன்(வயது61) இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் முருகேஷ் ( 31). இவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு மது பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கமும் இருந்தது. இதனால் அவர் போதையில் உள்ள போது தந்தை குமரேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கமாம். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி அன்று செலவுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டு குமரேசனிடம் வற்புறுத்தியுள்ளார்.

தந்தை கொலை

என்னிடம் பணம் இல்லை, யாரிடமாவது வாங்கி தருகிறேன் என அவர் கூறியுள்ளார். ஆனால் அதன்படி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முருகேஷ், தந்தை என்றும் பாராமல் குமரேசனை கல்லால் தாக்கி படுகொலை செய்தார்.

இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு குழித்துறை கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் நேற்று முருகேசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராபி ஆஜரானார்.

ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்து 8 மாதமாக முருகேஷ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு முருகேஷ் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story