கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை


கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை
x

தொழில் பிரச்சினையில் வாலிபர் கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்


தொழில் பிரச்சினையில் வாலிபர் கொலை செய்த வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கட்டிட மேஸ்திரி

காரியாபட்டி அருகே உள்ள இனக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). சத்திரம் புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்ற அலங்கார் குமார் (40).

இவர்கள் இருவரும் கட்டிட மேஸ்திரியாக கடலாடி கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனித்தனியாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே ஆட்களை வேலைக்கு பணி அமர்த்துவதில் பிரச்சினை ஏற்பட்டது.

வாலிபா் கொலை

இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி ரமேஷ் என்ற அலங்கார் குமார் மற்றும் அச்சம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (30) ஆகிய இருவரும் ஒரு பஸ்சிலும், செந்தில்குமார் மற்றும் அரியனேந்தல் காலனியை சேர்ந்த கனி (30) ஆகிய 2 பேரும் மற்றொரு பஸ்சிலும் காரியாபட்டி திரும்பினர். பின்னர் திருச்சுழி முக்கு ரோட்டில் செந்தில்குமாரும், கனியும் இறங்கி கள்ளிக்குடி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது வேல்முருகனும், ரமேஷ் என்ற அலங்கார் குமாரும் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து செந்தில்குமார், கனி ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் செந்தில் குமார் உயிரிழந்தார். கனி காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து கனி கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் என்ற அலங்கார்குமார், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கை நேற்று நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்து ரமேஷ் என்ற அலங்கார குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட வேல்முருகன் விடுவிக்கப்பட்டார்.


Next Story