தாயை அடித்துக்கொலை செய்த பேக்கரி கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


தாயை அடித்துக்கொலை செய்த பேக்கரி கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 1:15 AM IST (Updated: 24 Jun 2023 8:41 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

தாயை அடித்துக்கொலை செய்த பேக்கரி கடை ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பேக்கரி கடை ஊழியர்

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ரங்கசாமி தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் செல்வம். இவர் இறந்த நிலையில், பாக்கியலட்சுமி மகன், மகளுடன் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ்குமார் (வயது27). இவர் கேரளாவில் தங்கி ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சதீஷ்குமார், தனது தாயார் பெயரில் உள்ள வீட்டை தனக்கு தருமாறு கேட்டு தகராறு செய்து வந்தார். மேலும் தான் சம்பாதித்து கொடுத்த பணத்தில் தங்கைக்கு திருமண ஏற்பாடு செய்ததால் ஆத்திரமடைந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் கடந்த 14.3.2020 அன்று விடுமுறையில் கிருஷ்ணகிரி வந்த அவர், தனது தாயார் பாக்கியலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்குமாறும் அவரிடம் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த பாக்கியலட்சுமியை, மகன் சதீஷ்குமார் கட்டையால் அடித்துக்கொலை செய்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story