விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
ஓசூர்:-
நண்பரின் மனைவியை அஇடைய திட்டம் போட்டு விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேளகொண்டபள்ளி அருகே கலுகொண்டபள்ளியை சேர்ந்த திம்மையா மகன் மஞ்சுநாத் (வயது 42). இவர், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தேன்கனிக்கோட்டை தாலுகா பிக்கனபள்ளி அருகே கோலட்டி கிராமத்தில் பட்டு பண்ணையில் பிணமாக கிடந்தார். இவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரலணையில் இறந்த மஞ்சுநாத்தும், தேன்கனிக்கோட்டை அருகே தளி கொத்தனூர் அருகே உள்ள சிலிபிலிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாபு (52) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கலுகொண்டபள்ளியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அப்போது மஞ்சுநாத்தின் மனைவி மீது வெங்கடேசுக்கு மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது.
எனவே மஞ்சுநாத்தை கொலை செய்து விட்டு அவருடைய மனைவியை அடைய வெங்கடேஷ் திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து வெங்கடேஷ், மஞ்சுநாத்தை கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். இந்த வழக்கு ஒசூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ரோசலின் துரை விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசுக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைத்ததற்காக மேலும் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வெங்கடேசுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.