மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை- நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை-  நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x

களக்காட்டில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது

திருநெல்வேலி

களக்காட்டில் மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விவசாயி கொலை

நெல்லை மாவட்டம் களக்காடு நெடுவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுத்துரை (வயது 80), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது மருமகன் கிருஷ்ணன் (60) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணன், பொன்னுத்துரையின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசினார். தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் அரிவாளால் பொன்னுத்துரையை வெட்டிக் கொலை செய்தார்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story