வாலிபருக்கு ஆயுள் தண்டனை


வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

வியாபாரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்.

வியாபாரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தொழிலாளி கொலை

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 60). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (23).

இந்தநிலையில் முனியாண்டிக்கும், முத்துக்குமாருக்கும் இடைேய முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முனியாண்டி தனது வீட்டில் பால் கறப்பதற்காக அதிகாலையில் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த முத்துக்குமார் கையில் வைத்திருந்த கத்தியால் முனியாண்டியை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே முனியாண்டி பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கஜரா ஆர் ஜி ஜி விசாரித்து முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story