ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு


ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
x

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை கைதி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கவுதாலம் பகுதியை சேர்ந்தவர் தசராஜ் (வயது 96). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அந்த பகுதியில் நடந்த கொலை வழக்கில் கீழமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தசராஜிக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு உறுதிசெய்தது.

இதையடுத்து அவர் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். காசநோய், இருதய பாதிப்பு, வயது மூப்பு உள்ளிட்டவற்றால் அவதி அடைந்து வந்த அவர் அதற்காக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மயங்கி விழுந்து சாவு

இந்த நிலையில் தசராஜ் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து ஜெயிலர் மோகன்குமார் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தசராஜ் உயிரிழந்து குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story