குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெற்றி அடையாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெற்றி அடையாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெற்றி அடையாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பேசினார்

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு இந்தோ-அமெரிக்கன் கல்லூரியில் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கல்லூரி முதல்வர் எழிலரசி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலந்துகொண்டு 857 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ''குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வெற்றியடையாது. இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் திரைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தங்களை புதைத்துக் கொள்கிறார்கள்.

அதிலிருந்து மீண்டு 25 வயதுக்குள் தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்,

வாழ்வில் நீங்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அதை திருத்தி கொள்ளுங்கள், தவறு உங்கள் வாழ்வில் திரும்பத் திரும்ப இடம்பெற்றால் அந்த வாழ்க்கை பயனற்றதாகி விடும்'' என்றார்.

முடிவில் துணை முதல்வர் சிவராசன் நன்றி கூறினார்.


Next Story