ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்: சேலம் மத்திய சிறை வார்டர் பணிநீக்கம்


ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்: சேலம் மத்திய சிறை வார்டர் பணிநீக்கம்
x

ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்: சேலம் மத்திய சிறை வார்டர் பணிநீக்கம்.

சேலம்,

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு 3 நாட்கள் பரோலில் சென்ற ஹரிகிருஷ்ணன், அதன்பிறகு சேலம் மத்திய சிறை முன்பு வரை வந்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.

கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்தபோது, ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஹரிகிருஷ்ணன் ஏறி செல்வது தெரியவந்தது. அவரை ஏற்றி சென்றது யார்? என்று விசாரித்த போது, அவர் சிறை வார்டர் ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறை வார்டர் ராமகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

விசாரணையில் கைதிக்கும், வார்டருக்கும் இடையே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறை வார்டர் ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து சேலம் சிறை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டார்.


Next Story