கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாரல் மழை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாரல் மழை
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே வடஇலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வருகிற 4-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதே வானிலை தான் மாவட்டம் முழுவதும் நீடித்தது. அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் ஊழியர்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story