மின்னல் தாக்கி வனப்பகுதியில் தீ
மின்னல் தாக்கி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பயிர்கள் கருகி உள்ளதால், மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் மேகமூட்டம் இருந்தது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் குன்னூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 1.45 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் விழுந்தது. அப்போது குன்னூர் அருகே நான்செச் ஐபெக்ஸ் பகுதியில் மலை பகுதியை மின்னல் தாக்கியது. இதில் பாறை அருகே இருந்த செடி, கொடிகள் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றி பரவ தொடங்கியது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்திற்குள் தீ பரவாமல் தடுக்க தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தொழிலாளர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story