நெடுஞ்சாலைகளில் தொடர் வாகன விபத்து
நெடுஞ்சாலைகளில் தொடர் வாகன விபத்து
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் வளர்ந்து வரும் நகராட்சியாகும். இங்கு 200-க்கும் மேற்பட்ட நூல் மில்கள், எண்ெணய் ஆலைகள், அரிசி ஆலைகள் உள்ளன. மேலும் நாள்தோறும் கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்களும் வந்து சென்றுவருகிறது. இதை தவிர சுற்றுலா வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், பஸ் போக்குவரத்தும் உள்ளன. இந்த சாலையில் தேசியநெடுஞ்சாலை பகுதிகளில் நாள்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து ஏற்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வெள்ளகோவில் அருகே திருச்சி- கோவை நெடுஞ்சாலையில் தொடர்ந்து 3 வாகன விபத்துகள் நடந்ததில் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயர்தப்பினர். எனவே விபத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------