வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல்
அரகண்டநல்லூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ் என்பவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 40 லிட்டர் சாராயம் மற்றும் 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story