அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு சீல்
x

அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

ஊழியர் கைது

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் (பார்) நேற்று காலை சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்களும், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த மதுபான கூட ஊழியர் குன்னம் தாலுகா, ஒகளூர் கிழக்கு வ.உ.சி.நகரை சேர்ந்த சுப்ரமணியின் மகன் முருகேசனை (வயது 34) கைது செய்தனர்.

மதுபான கூடத்துக்கு 'சீல்'

அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த மதுபான கூடம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story