அனுமதியின்றி இயங்கும் மது பார்களை மூடி 'சீல்' வைக்க வேண்டும்
திபுப்த்தூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் மதுபார்களை மூடி சீ்ல் வைக்க வேண்டும் ென குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார்.
சீல் வைக்க வேண்டும்
திருப்பத்தூரை அடுத்த மடவாளம், ஏரிக்கோடி, திருமால் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளையொட்டி விவசாய நிலமும் உள்ளது. கூலித்தொழிலாளிகளும் நிறைய பேர் உள்ளனர். திருமால் நகர் பகுதியில் அனுமதியின்றி வரிசையாக மது பார்கள் அமைக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியர்கள் சாலையையொட்டியுள்ள விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தி விட்டு காலி மதுபாட்டில்களையும், உணவு கழிவுகளையும் விளை நிலத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் விவசாய வேலைக்கு வருவோர் காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கே சரியாக உள்ளது. விவசாய வேலை செய்ய முடியவில்லை.
மேலும், அங்குள்ள பாழடைந்த கட்டிடங்களில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அங்கேயே மது அருந்தி வருகின்றனர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு வாய் தகராறு முற்றி அடிக்கடி கைகலப்பாகி விடுகிறது. இதனால் இரவில் தூங்க முடியவில்லை. எனவே அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனே மூடி சீல் வைக்க வேண்டும். கடைகளை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் பானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.