மதுரையில் மதுபான பாரில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது


மதுரையில் மதுபான பாரில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது
x

மதுரையில் மதுபான பாரில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்

மதுரை


மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் பணச்செல்வம் என்பவருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பார்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காசி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு அரசு விதித்த விற்பனை நேரம் போக மீதி நேரங்களில் அதிக விலைக்கு மது விற்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் மனமகிழ் மன்றத்திற்குள் அதிரடியாக உள்ளே புகுந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள ஒரு அறையில் பீர் பாட்டில்கள் மற்றும் பிராந்தி பாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருப்பதை கண்டனர். பின்னர் அந்த பெட்டியில் இருந்த 6,228 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.பறிமுதல் செய்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர் மகாராஜன் மற்றும் மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story