ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு
ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, புதூர் நாடு, குருசிலாப்பட்டு, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு காலாவதியான நிலையில் இதனை அழிக்க மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் அளித்த உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 7,400 மது பாட்டில்களை ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்டலவாடி பகுதியில் நேற்று கோட்ட கலால் அலுவலர் சாந்தி மற்றும் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.