மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வியாபாரி கைது


மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வியாபாரி கைது
x

அரகண்டநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வீரபாண்டி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனர். அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. விசாரணையில் அவர் வீரபாண்டி காமன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரியான சுரேஷ் என்ற கட்ட சுரேஷ்(வயது 40) என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story