சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது


சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
x

சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). பல ஆண்டுகளாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த இவரை கடந்த மாதம் திருநாவலூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதால், இதனை தடுக்க ஏழுமலையை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்அடிப்படையில் ஏழுமலையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் திருநாவலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஏழுமலையை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை சிறையில் உள்ள எழுமலையிடம் சிறை அதிகாரி மூலம் வழங்கப்பட்டது.


Next Story