சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

நன்னிலம் அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
நன்னிலம்:
நன்னிலம் அருகே வீதிவிடங்கன் கிராமம், பெரும்படுகை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 58). இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மது விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட வந்ததாலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, கேசவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.