மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் மதுப்பிரியர்கள் கோரிக்கை மனு


மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் மதுப்பிரியர்கள் கோரிக்கை மனு
x
திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என தாசில்தாரிடம் மது பிரியர்கள் கோர8ிக்கை மனுஅளித்தனர்.

டாஸ்மாக் கடை

ஆரணி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் ஆரணி - சந்தவாசல் நெடுஞ்சாலையில் பள்ளி பகுதி அருகாமையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தின் மூலம் பொதமக்கள் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதை தொடர்ந்து கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததின் பேரில் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முருகேஷ் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து கடை திறக்கப்படவில்லை

இதனிடையே நேற்று நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மயான பகுதி அருகாமையில் டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மார்க் மேலாளர் மற்றும் அலுவலர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.

கோரிக்கைமனு

தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுபான பிரியர்கள் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசிடம் கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், ''நாங்கள் காமக்கூர் கிராமத்திற்கு அல்லது சந்தவாசல் கிராமத்திற்கு சென்று தான் மதுபானம் அருந்த வேண்டி இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் சென்று வந்தால் காவல்துறையினர் மூலம் எங்களுக்கு அபராத விதிக்கிறார்கள்.

ஆகவே எங்கள் பகுதியில் தற்போது அரசு மதுபான அதிகாரிகள் பார்த்த விநாயகபுரம் மயான பகுதியிலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும''் என்று கூறியிருறந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஆர்.ஜெகதீசன், ''இந்த மதுபான கடை இருப்பதினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறினர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் கடையை அகற்ற கலெக்டர் முருகேஷ் நடவடிக்கை எடுத்தார்.

தகவல் தெரிவிக்கிறோம்

இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு கடையை திறக்க அனுமதிக்கப்படவில்லை. உங்கள் கோரிக்கை குறித்து கலெக்டருக்கும் டாஸ்மார்க் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கிறோம்'' என்றார்.


Next Story