மூட்டைகளில் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்


மூட்டைகளில் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
x

குடியாத்தம் அருகே 6 மூட்டைகளில் இருந்த சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டறை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக வந்த புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் நேற்று மாலையில் ஏரிப்பட்டறை பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த 100-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளையும், 6 மூட்டையில் இருந்த சாராய பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story