மதுபானம் விற்பனை:தாய்-மகன் உள்பட 6 பேர் கைது


மதுபானம் விற்பனை:தாய்-மகன் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி பகுதியில் மதுபானம் விற்ற தாய்-மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள மீனாட்சிபுரம், தேவாரம், அணைக்கரைப்பட்டி, நாகலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பால்சாமி (வயது 72), அருண்பாண்டியன் (27) இந்திரா (55) முனியப்பன் (76) ஆகிய 4 பேர் மதுபானம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டையுடன் சென்றனர். இதையடுத்து சந்தேகத்தின்பேரில் மோட்டார்சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அப்போது சாக்கு பையில் 34 மதுபான பாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடி சர்ச் தெருவைச் சேர்ந்த முனியாண்டி (41), அவரது தாயார் செல்வம் (60) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story