மது விற்றவர் கைது
நெல்லையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டு இருந்த மேல தாழையூத்து பகுதியை சேர்ந்த முருகன் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கட்டளை பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (35) என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்தாராம். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் விட்டுசென்ற 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story