மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சட்ட விரோதமாக மது விற்பனை பல்வேறு இடங்களில் நடப்பதாக தொடர்ந்து போலீசாருக்கு குற்றச்சாட்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணிகளை கடந்த சில நாட்களாக தீவிர படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று படகு இல்லம் பகுதியில் இருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மஞ்சனக்கொரையை சேர்ந்த வேணுகோபால் என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.