கோத்தகிரி அருகே மது விற்றவர் கைது


கோத்தகிரி அருகே  மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 15 Sept 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோத்தகிரி சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து ஒருவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 13 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story