கோத்தகிரி அருகே மது விற்றவர் கைது
கோத்தகிரி அருகே மது விற்றவர் கைது
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு முன்னதாக, அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் கோத்தகிரி சப் -இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அருகே திடீர் மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வைத்து ஒருவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் குண்டாடா நடுஹட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 36) என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story