மதுக்கடை திறக்க அனுமதி வழங்க கூடாது


மதுக்கடை திறக்க அனுமதி வழங்க கூடாது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் வடக்கு வீதியில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்க கூடாது என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்,ஏப்.4-

பாபநாசம் வடக்கு வீதியில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்க கூடாது என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்திவாசன், பாபநாசம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் வக்கீல் சரவணன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுக்கடை

பாபநாசம் வடக்கு வீதி மின் மயானம் அருகில் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் அரசு மதுக்கடை மாற்றி அமைக்கப்படுவதாக தெரியவருகிறது. அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் அங்கு அரசு மதுபான கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வடக்கு வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இரட்டை பிள்ளையார் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அங்காடி, பள்ளி அமைந்துள்ளது.

அனுமதி அளிக்க கூடாது

இதன் பின்புறம் தான் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே குடமுருட்டி ஆறு அதன் படித்துறை அமைந்துள்ளது. டாஸ்மாக் கடை அமைந்தால் அங்கு மது குடிப்பவர்கள் பாட்டில்களை ஆற்றுப்பகுதியில் வீசி உடைத்து விச வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, மாவட்ட கலெக்்டர் இந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்க கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story