மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்
மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் மது கூடங்கள் அனைத்தும் வருகிற 16 மற்றும் 26-ந் தேதிகளில் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story